மாணவி சத்யா கொலை: ‘மனம் குமுறுகிறது’- நடிகர் தாமு உருக்கம்!

உலக உணவு தினத்தினை முன்னிட்டு மதுரையில் அட்சய பாத்திரம் என்ற அமைப்பின் சார்பில் பார்வையற்றோருக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் இரவு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் தாமு கலந்து கொண்டு பார்வையற்றோர்களுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.

முன்னதாக, பார்வையற்றோரிடம் உரையாற்றிய நடிகர் தாமு,அவர்களின் வேண்டுகோளை ஏற்று மிமிக்ரி செய்து காட்டினார். இதில் அட்சய பாத்திரம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பார்வையற்றோருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர்? – ஓபிஎஸ் பதில்

அடுத்ததாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் தாமு பேசுகையில் : இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர வேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது முதல் நாள் காட்சி பார்த்தபின் ரசிகர்கள் கூறும் கருத்தே நிர்ணயித்துவிடும்.

சினிமாவை ஓடிடியில் பார்ப்பதை விட திரையங்கில் பார்த்து ரசிப்பது தான் நன்றாக இருக்கும். எவ்வளவு பெரிய விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும், அது திரையரங்குகளில் தான் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம், திரைப்படங்களில் பாசிடிவ், நெகடிவ் இருக்கிறது இளைஞர்கள் பாசிட்டாவானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சினிமாவில் போதை காட்சிகளில் மது அருந்தக்கூடாது என எழுத்து போடுவது ஏமாற்றுவேலை, இது பெரிய மனமாற்றத்தை தராது என்றும் , நான் திரைப்படம் இயக்கினால் போதை காட்சிகள் இல்லாமல் எடுப்பேன். சினிமா என்பது பொழுதுபோக்கு தான். நல்ல சினிமா என்பது படம் பார்க்கும்போது டைம் போவதே தெரியாமல் இருப்பது தான், அது தான் வெற்றிப்படமாக அமையும்.

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை உருவக்கேலி செய்வது தடுக்க வேண்டும். யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது. சென்னை கல்லூரி மாணவி சத்யா கொலை சம்பவத்தை நினைத்தால் அழுகை வருகிறது. பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு தந்தையாக எனது உள்ளம் குமுறுகிறது. நீதிபோதனைகளை பள்ளி வகுப்பிலயே கற்றுக் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் மீது சினிமாத்துறையினர் அக்கறை காட்ட வேண்டும். சினிமாவில் பள்ளி சீருடையுடன் காதலிப்பது போன்ற காட்சிகளை நிஜம் என இளைஞர்கள் நம்புகின்றனர். இதனால் இளைஞர்கள் மனதில் தாக்கம் ஏற்படும். எனவே இது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும். சினிமா மூலம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். மாணவர்களுக்கு கல்லீரல் குறித்து பாடம் வைத்தால், மது பழக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள். மாணவர்கள் கிங்காக வர வேண்டும் என்றால் ஸ்மோக்கிங், ட்ரிங்கிக் போன்றவற்றை ஒலிக்க வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.