சென்னை: கச்சிக்கோடு – வாலையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி பெண் யானைகள் பலியானது குறித்து விளக்கமளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, பாலக்காடு மண்டல பொது மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.