புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு ஏற்படுத்தப்படும் என்றும் மருத்துவப்பாட நூல்களை தமிழில் அச்சடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
தாய் தந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகின்றனர். ஆனால், வளர்ந்த பின்பு பற்றோர்களின் பேச்சை கேட்க பிள்ளைகள் ஒரு சில துளி நேரத்தை கூட ஒதுக்குவதில்லை. இது வேதனையாக உள்ளது.
எனது தாய் தந்தைக்கு மரியாதை கொடுக்கின்றேன், மாற்றுக் கட்சியில் இருந்த என் தந்தையை மதித்து நடக்கிறேன். தாய் தந்தைக்கு தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு விதிகளை கடந்து நான் கவர்னராக பதவி ஏற்றவுடன் மேடையின் கீழ் இருந்த தாய், தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு தான் மற்றவர்களிடம் வாழ்த்து பெற்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவப்படிப்பு ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விருப்பப்பட்டவர்கள் தமிழில் மருத்துவம் படிக்கலாம். இதற்காக மருத்துவப்படிப்பு புத்தகங்களை தமிழில் அச்சடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement