ரஷ்யாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஐஸ்க் (Yeysk) நகரில், ரஷ்ய போர் விமானம் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்றிரவு ஏற்பட்ட இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஐஸ்க், உக்ரைன் நாட்டிற்கு அருகில் உள்ள ரஷ்ய நகரம் என கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய போர் விமானத்தின், விமானிகள் விபத்திற்கு முன்னரே வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளானது சுகோய் சு-34 ரக சூப்பர்சோனிக் போர் விமானம் என தெரிவிக்கப்பட்டது.
ராணுவ விமான நிலையத்தில் இருந்து பயிற்சியாக புறப்பட்ட இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரஷ்ய அதிபர் மாளிகை,”போர் விமான விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வகையிலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
Watch the moment of military #plane #crash at a residential building in #Yeysk , #Russia. pic.twitter.com/TEunPX3KQl
— Gaurav Kumar Singh (@GKSinghJourno) October 17, 2022
மேலும் படிக்க | ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொள்ளவில்லை: முடிவை மாற்றிய ஆஸ்திரேலியா
இந்நிலையில், தற்போது விமானம் குடியிருப்பு கட்டடங்களின் மீது மோதும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 9 மாடி குடியிருப்பின் மீது போர் விமானம் மோதியதும், அங்கு பெரும் தீ விபத்து ஏற்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
கட்டடத்தின் மீது விமானம் மோதுவதற்கு முன்னரே, அதன் விமானி வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த விமானம் பறக்க தொடங்கியபோது, திடீரென அதன் என்ஜினில் தீப்பற்றியதாக அந்த விமானி தகவல் தெரிவித்துள்ளார்.
In the Krasnodar Territory of Russia, a military plane crashed on a residential building in Yeysk. According to preliminary data, the pilot managed to eject.
Eyewitnesses report that after the plane crash, a residential building is on fire from the first to the ninth floor. pic.twitter.com/NytFaAB8Up
— Ey Villan (@NeutralNews111) October 17, 2022
விமானம் மோதி தீ விபத்து ஏற்பட்ட போது, அதன் எரிபொருளும் கசிந்ததால், தீ விபத்து அதிகமாகியுள்ளது. தீ வேகமாக கட்டடத்தின் 5 தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இந்த விபத்தால், 21,500 சதுர அடி தீக்கரையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ