தற்போது ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருப்பது சின்னத்திரை நடிகர்களான திவ்யா-ஆர்ணவ் பிரச்சனை தான், சன் டிவியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள் தான் இந்த திவ்யா-ஆர்ணவ். இதில் ஏற்பட்ட பழக்கம் மூலம் காதலர்களாக மாறிய இவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர், ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யாவிற்கு முதல் கணவர் மூலம் ஒரு குழந்தை உள்ளது, இது அனைத்தையும் தெரிந்துகொண்டு தான் ஆர்ணவ், திவ்யாவை மணந்து கொண்டிருக்கிறார். தற்போது ஆர்ணவின் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் திவ்யா சில நாட்களுக்கு முன்பு ஆர்ணவ் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை அடித்து துன்புறுத்தியதில் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து அதற்காக சிகிச்சை பெற்றதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்து பரபரப்பை கிளப்பினார்.
இவர்கள் இருவரும் வீட்டில் சண்டை போடும் வீடியோக்கள், ஆர்ணவ் சில பெண்களுடன் பேசிய உரையாடல் போன்றவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ணவ் ஏற்கனவே திருநங்கை ஒருவரை மணந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியானது, இருப்பினும் நடிகர் ஆர்ணவ் திவ்யா தன் மீது வைக்கும் குற்றசாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறிவந்தார். திவ்யாவுக்கு தனக்கும் உள்ள பிரச்சனை பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது ஆர்ணவ் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாக பேசியதாக அவருக்கு கண்டனம் எழுந்தது, பின்னர் தான் வாய் தவறி பேசிவிட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டும் பேசியிருந்தார். இப்படி இவர்களின் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க ஒருவழியாக போலீசார் ஆர்ணவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது 15 நாள் காவலில் அடைத்து வைத்திள்ளனர்.
தற்போது ஆர்ணவ் கைது செய்யப்பட்டிருப்பது மட்டுமின்றி மேலும் அவருக்கு பலமாக ஒரு அடி விழுந்திருக்கிறது, அதாவது அவர் நடித்துக்கொண்டிருந்த ‘செல்லம்மா’ சீரியலிலிருந்து ஆர்ணவ் நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி கைதாகி இருப்பதால் அவரை வைத்து சீரியலை தொடர விரும்பாத காரணத்தினால் சீரியல் குழுவினர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஆர்ணவ் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக தெலுங்கு சீரியல் நடிகரான திலீப் ஆர் ஷெட்டி என்பவரை நடிக்க வைக்க ‘செல்லம்மா’ சீரியல் குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.