தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்தது
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஆசிரியர் பணி நியமனங்களுக்கு 40 வயது வரம்பு என குறிப்பிடப்பட்ட நிலையில் இட ஒதுக்கீட்டை பிரிவினருக்கு வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களில் பொதுப் பிரிவினருக்கு 40 வயதில் இருந்து 45 ஆகவும், மற்றவர்களுக்கு 40 வயதில் இருந்து 50 ஆகவும் உயர்த்தியுள்ளது.