சென்னை: தமிழ்நாடு முழுவதும் 6,563 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை டிஜிபி பி.கே.ரவி தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 861 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி 6,673 தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர், மேலும் மாணவர்களுக்கு 1,610 தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது என்று தீயணைப்புத்துறை டிஜிபி கூறியுள்ளார்.