தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் நிறைய சந்து கடைகளில் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக இது குறித்த தகவல்கள் கசிந்த நிலையில் இதைப் போலிசார் கண்டு கொள்ளவே இல்லை.
இது குறித்து பெண்ணாகரம் காவல் இணை கண்காணிப்பாளருக்கு தெரியவர அவர் உத்தரவின் பேரில் சந்தேகத்திற்கு இடமான அந்த வீட்டிற்கு போலீசார் அதிரடி சோதனை போட்டனர். அப்போது அந்த வீட்டில் ஒரு ரகசிய அறை இருப்பதை கண்டறிந்தனர்.
அந்த ரகசிய அறையில் பாட்டில்களை பதுக்கி வைத்து மாமியார் மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. அத்துடன் விஷ காயாக கருதப்படும் ஊமத்தங்காயை அதில் சாறு பிழிந்து ஊற்றி போதை வஸ்துவை கலந்து வெளிநாட்டு மது என்று கூறி அதை அதிக விலைக்கு வெளியில் அவர்கள் விட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து மருமகள் மகேஸ்வரி மற்றும் மாமியார் லட்சுமி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த ரகசிய வியாபாரத்தில் தலைமறைவாக இருக்கும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்