இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள இஸ்லாமிய மைய மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தால், மசூதி தரைமட்டமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அந்த வீடியோவில், தீயில் எரிந்துகொண்டிருந்த மசூதியின் கோபுரம் சரிந்துவிழும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும், இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தும் வரை அந்தப் பகுதிக்கு, பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.