பிக்பாஸ்-6 நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறும் ஜி.பி.முத்து?

இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸின் ஐந்து சீசன்களை காட்டிலும் பிக்பாஸின் ஆறாவது சீசனில் நிறைய போட்டியாளர்கள் ஹவுஸ்மேட்ஸாக களமிறங்கியுள்ளனர்.  இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் தான் டிக்டாக் மற்றும் யூடியூப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, இவரை பிக்பாஸ் வீட்டில் கண்டதிலிருந்தே ரசிகர்கள் உற்சாகமடைந்துவிட்டனர்.  ‘செத்தப்பயலே, நாரப்பயலே’ என்கிற வரிகளுக்கு சொந்தமான ஜி.பி.முத்துவை ஆரம்பத்தில் டிக்டாக்கில் ரசிகர்கள் கழுவி ஊற்றினாலும், போக போக இவரது எதார்த்தமான நடத்தைகள் ரசிகர்களுக்கு பிடித்துப்போய்விட்டது.  பேப்பர் ஐடி – ஜி.பி.முத்து காம்போ தான் அல்டிமேட்டாக இருக்கும், இவருக்கு ரசிகர்கள் அனுப்பும் பார்சல் வீடியோக்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும், அடிக்கடி சமூக வலைத்தளங்களில் இவரை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் இப்போது தினமும் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

கிட்ட்டத்தட்ட இந்த சீசனே ஜி.பி.முத்துவை வைத்து தான் என்று சொல்லலாம், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அன்றே ஆதாமா யார் அது என்று கேட்டு கமல்ஹாசனையே பங்கம் செய்துவிட்டார்.  வடிவேலுவுக்கு அடுத்தபடியாக மீம் க்ரியேட்டர்களுக்கு பெரிதும் உதவுவது இவர்தான் என்றும் சொல்லலாம், தினசரி இவரை வைத்து தான் மீம்ஸ்கள் ஊடகங்களில் தெறிக்கிறது.  ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இவரிடம் ஜாலியாக பழக, மற்றொரு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி மட்டும் இவரிடம் முறைத்துக்கொண்டிருக்கிறார், டிக்டாக்கில் இருக்கும்போதே தனலட்சுமிக்கு பலருடனும் சின்ன சின்ன பிரச்சனை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.  எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜி.பி.முத்து எப்போதும் போல அவரும் ஜாலியாகவும், வீட்டில் உள்ளவர்களையும் ஜாலியாகவும் வைத்துக்கொண்டிருக்கிறார், ஜி.பி.முத்து ஆர்மியும் இவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் முதல் தலைவராக ஜி.பி.முத்து வெற்றிபெற்றுள்ளார், ஒரு வாரமாக கலகலப்பாக இருந்துவந்த ஜி.பி.முத்து தற்போது சோர்வடைந்துள்ளார்.  அதற்கு காரணம் அவரது குடும்பம், அவர் குடும்பத்தின் மீது அதிகம் பாசம் வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.  இந்நிலையில் தனது குடும்பத்தை பிரிந்து இவ்வளவு நாட்கள் இருந்த இவரால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை, இவர் குடும்பத்தை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பதை அடிக்கடி இவரது பேச்சில் கவனிக்கலாம்.  ஆனால் இப்பொழுது அவர் தனது குடும்பத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று மிகவும் வேதனையில் பேசியிருக்கிறார், இதனால் அவர் போட்டியை விட்டு பாதியிலேயே வெளியேறிவிடுவாரோ என்று அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.