மாடுகள் விடும் ஏப்பத்திற்கு வரி.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!

நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், 2050 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் கார்பன் உமிழ்வு  பூஜ்ஜியமாக ஆகிவிடும் என்று உறுதியளித்துள்ளார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டுக்குள் பண்ணை விலங்குகள் காரணமாக வெளியாகும்  மீத்தேன் உமிழ்வை 10 சதவிகிதம்  குறைக்கவும், 2050 க்குள் 47 சதவிகிதம் வரை குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்நிலையில், மாடுகள், ஆடுகள் போன்ர பண்ணை விலங்குகள் விடும் ஏப்பத்திற்கு, வரி விதிக்கும் திட்டம் ஒன்ரை முன் வைத்துள்ளார். நியூசிலாந்தில் மக்கள் தொகையை விட பண்ணை விவசாயத்திற்காக வளர்க்கப்படும் கால்நடை எண்ணிக்கைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை எதிர்த்து, வியாழன் அன்று நியூசிலாந்து முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் வீதிக்கு வந்து மாடுகளின் ஏப்பம் மற்றும் பிற பசுமை இல்ல வாயு  எனப்படும் சுற்று சூழலை பாதிக்கும் வாயு உமிழ்வுகள் மீது வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், இருப்பினும் பேரணிகள் பலர் எதிர்பார்த்ததை விட சிறிய அளவிலான பேரணிகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களில் 50 க்கும் மேற்பட்ட போராட்டங்களை ஏற்பாடு செய்ய  திட்டமிடப்பட்டிருந்தனர். கடந்த வாரம், காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பண்ணை வரியை அரசாங்கம் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை இது வரை உலகில் எந்த நாடுகளும் எடுக்காத நடவடிக்கையாக இருக்கும் என்றும், காலநிலைக்கு உகந்த பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் விவசாயிகள் செலவை ஈடுசெய்ய முடியும் என்றும் அரசாங்கம் கூறியது.

மேலும் படிக்க | விமானத்தில் ‘டிக்கெட் இன்றி’ பயணம் செய்த பாம்பு; பயத்தில் அலறிய பயணிகள்!

நியூசிலாந்தில் பண்ணை விவசாயம் மிகவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது.  10 மில்லியன் மாட்டிறைச்சிகான மாடுகள் மற்றும் பால் வழங்கும் மாடுகள் உள்ளன. 26 மில்லியன் செம்மறி ஆடுகள் உள்ளன. வெறும் 5 மில்லியன் மக்களுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையில் பண்ணை விலங்குகள் தான் உள்ளன.  எனவே, மனிதர்களை விட கால்நடைகள் காரணமாகத் தான் சுற்று சூழலை பாதிக்கும் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. கால்நடைகளை ஏப்பம் விடுவதன் மூலம் வெளியிடப்படும் மீத்தேன் அலவு அதிகமாக உள்ளது. ஆனால் சில விவசாயிகள் உத்தேச வரி உண்மையில் உணவு தயாரிப்பதில் குறைந்த திறன் கொண்ட நாடுகளுக்கு விவசாயத்தை மாற்றுவதன் மூலம் உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கும் என்று வாதிடுகின்றனர்.

மேலும் படிக்க | கொடூர கொலையாளியை காதலித்த பெண் சிறை அதிகாரி! சிறையில் பூத்த காதல்!

மேலும் படிக்க | NRI டாக்டர் விவேக் மூர்த்திக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.