மிசவுரி: உலக சாம்பியன் கார்ல்சன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார் நைமான்.
உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 31. அமெரிக்காவில் நடந்த சின்குபீல்டு கோப்பை தொடரில், 19 வயது வீரர் ஹான்ஸ் நைமானிடம்(அமெரிக்கா) தோல்வியடைந்தார். அடுத்து சாம்பியன்ஸ் செஸ் தொடரில் நைமானுக்கு எதிரான போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதுகுறித்து கார்ல்சன் கூறுகையில்,”சமீபகாலமாக நைமன் அதிகமாக ஏமாற்றுகிறார். இனிமேல் இவருக்கு எதிராக விளையாட மாட்டேன்,” என்றார். கார்ல்சன் புகார் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இதனிடையே தனது நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, கார்ல்சன் மீது அமெரிக்காவின் மிசவுரி கோர்ட்டில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார் நைமன். கார்ல்சன் ரூ. 828 கோடி தர வேண்டும் என கேட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement