நைஜீரியாவில் பெண்ணொருவர் இரண்டு ஆண்களை மணந்து கொண்டு ஒருவருக்கு தெரியாமல் ஒருவருடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இரண்டு கணவர்களிடமும் சிக்கியுள்ளார்.
ஆர்சிங் என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார், இந்த நிலையில் சமீபத்தில் கணவர் ஆர்சிங் காரை எடுத்து கொண்டு வெளியே சென்ற போது நபர் ஒருவர் காரை நிறுத்தும்படி கூறியுள்ளார்.
பின்னர் காரை நிறுத்தியவர், கார் ஓட்டுனரிடம் இது என் மனைவியின் கார், இதை ஏன் நீ எடுத்து செல்கிறாய் என கேட்க ஓட்டுனரோ இது என் மனைவியின் கார் என கூறியிருக்கிறார்.
இதையடுத்து இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தங்கள் தரப்பு ஆதாரங்களை இருவரும் காட்டினார்கள்.
Per Anders, Kupicoo, FG Trade/ Getty images
அதாவது இரண்டு பேரும் ஆர்சிங் புகைப்படங்களை காட்டி அவர் தான் தங்கள் மனைவி என கூறினர். அப்போது தான் இரண்டு பேருக்கும் ஒரே பெண் தான் மனைவி எனவும் அவர் தான் ஆர்சிங் எனவும் தெரியவந்தது.
அதன்படி ஒரு கணவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் என இரண்டு பேருடனும் ஓராண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
வார இறுதி நாட்களில் ஒரு கணவருடனும், வார நாட்களில் இரண்டாம் கணவருடனும் ஆர்சிங் அட்டவணை போட்டு வசித்து வந்திருக்கிறார்.
இதன் பிறகு இரண்டு கணவரும் சேர்ந்து அர்சிங் விடயத்தில் என்ன முடிவெடுத்தார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.