கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நிலையில் தற்போது அதுகுறித்து போலீசார் விசாரணை தீவிரமடைந்து இருக்கின்றது. தமிழ்நாடு காவல் உயர்அதிகாரிகள் முகாமிட்டு தீவிரமாக இந்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் ஈஸ்வரன்கோவில் வீதியில் தான் விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து தான் ஏடிஜிபி தாமரக்கண்ணன் நேரடியாக இந்த பகுதியில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த சூழ்நிலையில் தான் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 தனிப்படைகள் கார் கடந்து வந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்கும், 3 தனிப்படைகள் இந்த விபத்தின் பின்புலம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கார் யாருடையது என்ற கேள்வி எழும்பியது, காரை பொறுத்த வரை பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் அவர் அந்த காரை மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ஒரு டீலர்க்கு விற்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவ இடத்தில் விபத்தை அறிந்து கொள்வதற்காக நடமாடும் தடய அறிவியல் துறை ஆய்வகம் வந்திருக்கின்றது. இந்த விசாரணை பொறுத்த வரை இன்று மாலை வரை தொடர்ந்து நீடிக்கப்படும் என தெரியவந்துள்ளது. காவல்துறை அதிகாரிகளை பொறுத்த வரை கோவையின் இந்த அசம்பாவிதம் குறித்து விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கார் யாருக்கு சொந்தமானது இந்த கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல பிரபாகரன் என்ற நபரில் பெயரில் தான் இந்த கார் இருக்கிறது.
விசாரணையின் அடிப்படையில் இந்த கார் பிரபாகரனுக்கு சொந்தமில்லை என்றும் அவருக்கு சார்ந்த நபர்கள் இதில் வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அந்த டீலர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேகத்தடை மீது கார் ஏறி இறங்கிய போது விபத்துகுள்ளானதா அல்லது உள்ளே வேறு எதுவும் அசம்பாவிதம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. தற்போது கிடைத்த தகவலின் படி அதில் இறந்தவர் யார், அவர் எங்கு இருந்து வந்தார் என்ற தகவல் குறித்தும் அந்த கார் அவருக்கு சொந்தமில்லை என்றும் தற்போது உறுதியாகியுள்ளது.