வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங் :சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு தற்போது நடந்தது. ஒரு வாரத்துக்கு நடக்கும் இந்த மாநாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முடிவெடுத்தபடி, சீன அதிபராக மூன்றாவது முறையாக ஷீ ஜிங்பிங் தொடரும் தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடந்தது. முன்னதாக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நேற்று நடந்த கூட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் லீ கேகியாங்க் உட்பட பல முக்கிய தலைவர்கள், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில், மத்திய குழுவுக்கு, 205 நிரந்தர உறுப்பினர்களும், 171 மாற்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு, இன்று நடக்கும் கூட்டத்தில், 25 உறுப்பினர் அடங்கிய அரசியல் குழுவை தேர்ந்தெடுக்கும். அந்தக் குழு, ஏழு பேர் அடங்கிய நிலைக் குழுவை தேர்ந்தெடுக்கும். இது தான் கட்சியையும், நாட்டையும் வழிநடத்தும், கட்சியின் பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
சீன அதிபர் ஜின்பிங்:
இந்நிலையில், சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பார். சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு பிறகு அதிக காலம் அதிபராக இருப்பவர் என்ற பெருமையை ஜின்பிங் பெறுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement