நிலக்கோட்டையில் தொடர் மழை காரணமாக மல்லிகைப்பூ வரத்து குறைவால் தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது மல்லிகைப்பூ 1500 ரூபாய்க்கு விற்பனை. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தொடர் மழை காரணமாக வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் புவிசார் குறியீடு கொண்ட மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அதிக அளவில் பூக்கள் விவசாயம் தான் நிலக்கோட்டை பகுதிகளில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீபாவளி, கார்த்திகை என அடுத்தடுத்து விசேஷ காலங்கள் தொடங்கி உள்ளது. தற்போது கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக பூக்கள் செடியிலேயே உதிர்ந்து விழுந்து விடுவதால் பூக்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.
குறிப்பாக மல்லிகை பூ வரத்தும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 700 க்கு மட்டுமே விற்பனையானது. தற்போது ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 1200 முதல் 1500 வரை விற்பனையாகிறது. மற்ற பூக்களுக்கும் சற்று விலை உயர்வாக விற்பனையாகி வருகிறது.
ஜாதிப்பூ ரூபாய் 600 க்கும், முல்லைப்பூ ரூபாய் 1200 க்கும், கனகாம்பரம் பூ ரூபாய் 1500, செண்டுமல்லி ரூபாய் 20க்கும், அரளிப்பூ ரூபாய் 150 க்கும், பட்டன் ரோஸ் ரூபாய் 200 க்கும், பன்னீர் ரோஸ் ரூபாய் 120 க்கும், சாதா ரோஸ் ரூபாய் 50 க்கும், துளசி ரூபாய் 30 க்கும் விற்பனையாகின்றன.