பிக்பாஸ் போட்ட பலே பிளான்! ஜிபி முத்துவுக்கு பதிலாக உள்ளே வரப்போகும் மாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் போட்டியில் இருந்து ஜிபி முத்து வெளியேறி இருக்கிறார். கடந்த ஒருவாரமாகவே அப்செட்டாகி இருந்த ஜிபி முத்து, வீட்டில் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவரால் முழுமையாக எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. பிக்பாஸ் அழைத்து பேசியபோது, குடும்பத்தின் மீது ஞாபகம் இருப்பதாக கூறிய ஜிபி முத்து, மகனை பிரிந்து இருக்கவே முடியவில்லை என கண்ணீர் விட்டார். பிக்பாஸ் ஆறுதல் கூறியபோதும், அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.

வார இறுதி நாளான நேற்று கமல்ஹாசனும், ஜிபி முத்துவிடம் இது குறித்து கேட்டார். அப்போதும், குடும்பத்தையும், மகனையும் பிரிந்து தன்னால் இருக்கவே முடியவில்லை என கூறிய ஜிபி முத்து, தயவு செய்து மக்கள் என்னுடைய நிலையை புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். கமலும் ஜிபி முத்துவை சமரசம் செய்ய சில வார்த்தைகள் கூறினார். ஆனால் அவர் அதனை கேட்டுக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜிபி முத்துவை அனுமதித்தார் கமல்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக மாஸ் போட்டியாளரை களமிறக்க பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மன்சூர் அலிகானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். அவர் பிக்பாஸை ஏற்கனவே பலமுறை கடுமையாக விமர்சித்து இருப்பதால், அவரை வீட்டுக்குள் கொண்டுவந்தால் ஜிபி முத்துவை விட அதிக டிஆர்பி கிடைக்கும் என பிளான் போட்டிருக்கிறது பிக்பாஸ் டீம். அதற்கு திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மன்சூர் அலிகான் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது தான் இப்போதைக்கு தெரியவில்லை. அவர் பாசிடிவ் கமெண்ட் கொடுத்துவிட்டால் அடுத்தவாரமே உள்ளே கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தயார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.