தீபாவளி பண்டிகை என்பதால் இறைச்சி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் மீன்களின் விலை குறைந்துள்ளது.
தீபாவளியன்று இறைச்சி எடுப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், இறைச்சி விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை, நாளை தீபாவளிபண்டிகை என்பதால் இறைச்சி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மட்டன் கிலோ ரூ. 800 முதல் ரூ. 900 வரைக்கும், சிக்கன் கிலோ ரூ. 240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் ஆர்வமாக இறைச்சி வாங்கி செல்கின்றனர்.
அதே நேரத்தில் காசிமேடு சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது. சராசரியாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.100 முதல் ரூ. 200 வரை விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
newstm.in