காதலை மறுத்த பெண்ணை திருமண ஏற்பாட்டின்போது கொடூரமாக தாக்கிய இளைஞர்
திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞரால் பரபரப்பு
இந்திய மாநிலம் ஆந்திராவில் இளைஞர் ஒருவர் திருமண மண்டபத்தில் நுழைந்து சிலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிராங்கிபுரம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு திருமண நிச்சயம் நடந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் வீட்டார் திருமண வேளைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில் பேராம் எடுகொண்டலு என்ற இளைஞர் குறித்த பெண்ணை காதலித்துள்ளார்.
ஆனால் அவரது காதலை அப்பெண் நிராகரித்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற உள்ளதை அறிந்த பேராம் கோபமடைந்துள்ளார்.
அதன் பின்னர் கையில் கத்தி மற்றும் இரும்பு கம்பியுடன் சென்ற அவர், குறித்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் மணப்பெண் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் பேராம் எடுகொண்டலுவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.