பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்தெடுக்கப்பட்டிருப்பதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் நிர்வாகிகள் குழு (1922 கமிட்டி) அதிராகரபூர்வமாக அறிவித்துள்ளது.
கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரான மெர்டவுன்ட்-டும் விலகுவதாக அறிவித்தார்.
இதனை அடுத்து கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்.
லிஸ் ட்ரஸ் பதவி விலகியதை அடுத்து பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி எழுந்த நிலையில் கரிபியன் தீவில் விடுமுறையை அனுபவித்து வந்த ஜான்சன் சனிக்கிழமையன்று லண்டன் திரும்பினார்.
ஜான்சன் பிரதமராவதற்கு 100 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் சொந்த கட்சி எம்.பி.க்களே இரு பிரிவாக செயல்பட்டால் நாடாளுமன்றத்தில் தான் சுதந்திரமாக பணியாற்ற முடியாது என்ற தெளிவு பிறந்ததை அடுத்து போரிஸ் ஜான்சன் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார்.
போரிஸ் ஜான்சனைப் போல் மற்றொரு போட்டியாளரான மெர்டவுன்ட்-டும் தனது பொறுப்பை உணர்ந்ததால் இந்திய வம்சாவழியில் வந்த ரிஷி சுனக் போட்டியின்றி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.