அநியாயம் பண்றிங்கடா… ராத்திரியில் ராக்கெட் விட்டவர் மீது வழக்குப்பதிவு – வைராலகும் வீடியோ!

நாடு முழுவதும் தீபாவளி நேற்று (அக். 25) கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு பட்டாசு உள்ளிட்ட வாணவேடிக்கைகளால் பல்வேறு நகரங்கள் புகை மண்டலமாக மாறின. அந்த வகையில், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், ஒருவர் பட்டாசு வெடித்தது மட்டுமின்றி ஆபத்தான முறையிலும் வெடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைராலனது. 

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஜன்னல்களில் ஒருவர் தீபாவளிக்கு ராக்கெட்டுகளை ஏவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. போலீசார் தற்போது அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர், மேலும் அவர் மீது ஐபிசியின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தானே மாவட்டத்தின் உல்ஹாஸ்நகர் நகரில் நடந்த இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை அடுத்து, தானே போலீசாருக்கு இதுகுறித்து தெரியவந்தது. வீடியோவில், அந்த நபர் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் முன் நின்று ஒரு பெட்டியை வைத்திருப்பதைக் காண முடிகிறது. சில வினாடிகளுக்குப் பிறகு, பல தீபாவளி ராக்கெட்டுகள் பெட்டியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறி, மேலே உள்ள அடுக்குமாடி மாடிகளின் பால்கனிகள் மற்றும் ஜன்னல்களைத் தாக்குகிறது.

அந்த நபர் மீது IPC பிரிவுகள் 285 (தீ அல்லது எரியும் பொருள் தொடர்பாக அலட்சிய நடத்தை), 286 (வெடிக்கும் பொருள் தொடர்பாக அலட்சியமாக நடத்தை) மற்றும் 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.