ஆமா… வாட்ஸ்-அப் ஏன் முடங்குச்சு? ஒருவேளை அதுவா இருக்குமோ? தெறிக்கவிடும் மீம்ஸ்!

படிப்பறிவு இல்லாதவர்கள் கூட நன்கு அறிந்து வைத்திருக்கும் தகவல் தொடர்பு தளமாக வாட்ஸ்-அப் விளங்குகிறது. உலகிலேயே அதிக அளவிலான பயனாளர்கள் வாட்ஸ்-அப்பிற்கு தான் இருப்பர் என்ற பேச்சும் உண்டு. வெறும் மெசேஜ் அனுப்புவது மட்டுமின்றி, அலுவலகப் பணிகளுக்கு, வர்த்தக பயன்பாட்டிற்கு, பணம் அனுப்ப மற்றும் பெறுவதற்கு என பல்வேறு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

இத்தகைய வசதிகள் கொண்ட வாட்ஸ்-அப் சேவை முடங்கினால் என்னவாகும்? அப்படியே உலகமே ஸ்தம்பித்து போய்விட்டதை போல உணரக்கூடும் அல்லவா? ஆம். அப்படித்தான் இன்றும் (அக்டோபர் 25) நடந்திருக்கிறது. சில நிமிடங்கள் என்றால் கூட பரவாயில்லை. எப்படியாவது தாக்குப் பிடித்து விடலாம். ஒரு மணி நேரத்தை தாண்டி விட்டதால் வர்த்தக மற்றும் அலுவலகச் செயல்பாடுகள் அப்படியே முடங்கிப் போய் கிடக்கின்றன.

வாட்ஸ்-அப்பிற்கு என்னாச்சு? மெசேஜ் போகவும் இல்ல, வரவும் இல்ல… தவியாய் தவிக்கும் பயனாளர்கள்!

இவ்வளவு நேரம் வாட்ஸ்-அப் முடங்கியதே இல்லை என்று சொல்லப்படுகிறது. இதுவரை உலகம் கண்டிராத பெரிய அளவிலான தொழில்நுட்ப கோளாறு நடந்து விட்டதோ? என்ற சந்தேகத்தை கொளுத்தி போட்டுள்ளனர். இதுபற்றி வாட்ஸ்-அப்பின் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டுள்ள தகவலில், பிரச்சினை குறித்து தெரியவந்துள்ளது. விரைவில் வாட்ஸ்-அப் சேவை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நெட்டிசன்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் தங்களது கைவண்ணத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர். ட்விட்டரில் இதுதான் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அதாவது, வாட்ஸ்-அப் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து மற்ற சமூக வலைதளங்களான டெலிகிராம், லைன் உள்ளிட்டவை சிரிப்பதை போலவும், மீண்டும் வாட்ஸ்-அப் வந்துவிட்டதா?

என்பதை அறிய அனைவரும் முண்டியடித்துக் கொண்டு ட்விட்டர் பக்கம் ஓடிவருவதைப் போலவும் பதிவிட்டு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டரில், என்னுடைய டாக்ஸி ட்ரைவரிடம் கேட்டேன். வாட்ஸ்-அப் முடங்கியதற்கு அவர் சூரிய கிரகணம் தான் காரணம் என்று சொன்னதாக பதிவிட்டிருக்கிறார்.

#whatsappdown வாட்ஸ் அப் திடீர் முடக்கம்: மெட்டா விளக்கம்!

இந்நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் வாட்ஸ்-அப் சேவை தற்போது திரும்பியுள்ளது. இதனால் பயனாளர்கள் மிகவும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். முடங்கிய வேலைகள் அனைத்தும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. வாட்ஸ்-அப் சேவை திரும்ப வந்ததையும் Avengers Endgame ரேஞ்சுக்கு மீம்ஸ்களாக போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.