புதுடில்லி : புதுடில்லியில் சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றியதில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். அவர் யார் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
தலைநகர் புதுடில்லியில் உள்ள அலிபூர் பல்லா சாலையில் சொகுசு கார் ஒன்றில் வந்த நபர் காரை சாலையோரத்தில் நிறுத்தினார். அடுத்த நிமிடம் அந்தக் கார் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தீயை அணைப்பதற்குள் காரின் பெரும்பான்மையான பகுதிகள் சாம்பலாகி விட்டன.
காருக்குள் இருந்து உடல் கருகி எலும்புக் கூடான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். அவர் யார் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் கார் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, அது புதுடில்லி குருஷேத்ரா பகுதியில் வசிக்கும் ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடக்கிறது.
கடந்த செப்டம்பரில் புதுடில்லி கஞ்சவாலாவில் இதேபோல் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement