சென்னை: தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா? என சிலர் நினைக்கின்றனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார். சிலரின் எண்ணம் சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது எனவும் அமைச்சர் கூறினார்.