மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம். அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் முடங்கி விடுகிறது. தற்போது உலகம் முழுக்க வாட்ஸ் அப் சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என நெட்டிசன்கள் மற்றும் வாட்ஸ்அப் பயனர்கள் கூறுகின்றனர். சிக்கலை ஒப்புக்கொண்ட மெட்டா செய்தித் தொடர்பாளர், “நிறுவனம் முடிந்தவரை விரைவாக செயல்பட்டு சேவைகளை மீட்டெடுக்க முயற்சிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயலிழப்பு ஏற்படுகிறது, ஆயிரக்கணக்கான பயனர்கள் இடையூறுகளைப் புகாரளிக்கின்றனர். உண்மையில், உலகளாவிய செயலிழப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ட்விட்டர் பயனர்கள், வழக்கம் போல #whatsapp down என்ற ஹாஸ்டேக் உடன் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.