பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளாதால், அவசர கால பணியாளர்கள் தவிர்த்து மற்ற அமெரிக்கர்கள் நைஜீரியாவின் தலைநகரை விட்டு கிளம்புமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
நைஜீரியா பெரிய மால்கள், பள்ளிகள், விடுதிகள், பார்கள், அரசு கட்டடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-10-22) அமெரிக்கர்கள் வெளியில் நடமாடுவதைக் குறைக்க வேண்டும் என்று எச்சரித்திருந்தது. இந்நிலையில் நைஜீரியா தலைநகர் அபுஜாவில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியைத் தொடர்ந்து பிரிட்டன், ஆஸ்திரேலியா , கனடா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரலாற்றில் 1980’களில் ஆறு மில்லியன் மக்கள்தொகையுடன் மிகவும் பாதுகாப்பாக இருந்த இடம் அபுஜா. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இஸ்லாமியக் குடியரசு குழுக்களின் பல தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், நைஜீரியாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் மக்கள் அனைவரும் அமைதிகாக்கும்படியாக வலியுறுத்தியுள்ளது. அதோடு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் குஜே நகரின் புறநகரில் உள்ள சிறைச்சாலையிலிருந்து சிலர் தப்பித்ததை அடுத்துப் பாதுகாப்பற்ற நிலைமை நீடித்து வருவதாக அபுஜா மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.