இலங்கை கடற்படையால் 7 மீனவர்கள் கைது: ராமேசுவரத்தில் நாளை வேலைநிறுத்தம்

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 700-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மிக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதிலிருந்த மீனவர்கள் கிளின்டன், அந்தோனி, வினிஸ்டன், மோசஸ், மரியான், வேல்ராஜ், அந்தோனி ஹானஸ்ட் ஆகிய 7 பேரை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, மீனவர்களை விடுவிக்கக் கோரி நாளை (அக். 29) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், தங்கச்சி மடத்தில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவது என்று மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.