உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த இருப்பதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், சர்வதேச வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மாநாட்டில் பேசிய புடின், உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான எந்த நோக்கமும் இல்லை என தெரிவித்தார்.
மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் உள்ள சவால்களை ஒப்புக்கொண்டுள்ள புடின், வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்க்கும் தன்மையை ரஷ்யா நிரூபித்திருப்பதாகவும் தெரிவித்தார்.