உயிருக்கு போராடும் பெண்ணிற்கு உதவிக்கரம் நீட்டிய தயாரிப்பாளர் தாணு

சென்னை – காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் 33 வயது நிரம்பிய ஒரு பெண்ணிற்கு சிகிச்சைக்கான நிதி ஆதரவை சினிமா தயாரிப்பாளர் எஸ். தாணு தாராள மனதுடனும் முன்வந்திருக்கிறார்.

வாழ்க்கைத் துணைவர் இல்லாமல் தனியொரு தாயான இப்பெண்ணுக்கு உறுப்பு இடை நார்த்திசு நுரையீரல் நோய் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுாக இந்நோயினால் அவதிப்படுகிறார் இந்த பெண். இந்நோயின் காரணமாக நுரையீரல்களில் வடுக்கள் / தழும்புகள் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது, இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை மேற்கொள்வதற்காக இப்பெண் நோயாளி காத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக டிரான்ஸ்டான் (TRANSTAN) என அழைக்கப்படும் தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தில் இவரது பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வி. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் எஸ். தாணு, இப்பெண் நோயாளியின் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். இதை காவேரி மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர். ஐயப்பன் பொன்னுசாமி, டாக்டர் யாமினி கண்ணப்பன் ஆகியோர் இப்பெண்மணியின் குடும்பத்தின் சார்பாக இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொண்டார். தாணுவிற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் காவேரி மருத்துவமனை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவீனத்தொகையை காவேரி மருத்துவமனை பெருமளவு குறைத்திருக்கிறது. எனினும் இப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அறச்சிந்தனையுள்ள பிற தானமளிப்பவர்களிடமிருந்து இச்சிகிச்சைக்குத் தேவைப்படும் நிதியை திரட்ட காவேரி மருத்துவமனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.