நடிகை குஷ்பு, காயத்ரி ரகுராமன், நமீதா ஆகியோரை குறித்து திமுகவை சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சையாக பேசியதாக நடிகை குஷ்பு ட்வீட் போட்டிருந்தார். அந்த ட்வீட்டில், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்யும்போது, அது அவர்கள் வளர்ந்த விதத்தையும், அவர்கள் வளர்ந்த நச்சான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர் என்று பதிவிட்டு திமுக எம்பி கனிமொழியை டேக் செய்துள்ளார்.
அதற்கு பதில் ட்வீட் பதிவிட்ட கனிமொழி, ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், எந்த இடத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அல்லது அவர்கள் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. மேலும், எனது தலைவர் ஸ்டாலினும், எனது கட்சியினரும் இதை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதால் என்னால் வெளிப்படையாக இதற்கு மன்னிப்பு கேட்க முடிகிறது” என கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வினை ஒட்டி நடிகை கஸ்தூரியும் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அந்த ட்வீட்டில் வெறுக்கத்தக்க ஹாஷ் டேக் ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார். அந்த ஹாஷ் டேகை கஸ்தூரியின் ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த டாக்டர் ஷர்மிளா காஸ்திரியை டேக் செய்து ஒரு ட்வீட் போட்டார். அதில், அந்த பேச்சு கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்கப்பட வேண்டியது மேடம்.
இருப்பினும், நீங்கள் தொடங்கி வைத்த #திராவிடிய_பசங்க என்ற ஹேஷ்டேகை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்த டேகை சங்கி குழு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தொடங்கப்பட்ட #திராவிடிய_பசங்க என்ற ஹேஷ்டேக்கில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நீங்களும் அதை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று மறைமுகமாக சாடியுள்ளார்.
ஆனால் அதற்கு ஆவேசமாக ஷர்மிளாவை தாக்கி கஸ்தூரி ட்வீட் ரிப்ளை செய்துள்ளார். கஸ்தூரியின் ட்வீட்டில், ”மன்னித்தல் என்பது ஏற்றுக்கொள்வதும் ஊக்குவிப்பதும் ஆகும். கண்டனம் என்றால் எதிர்ப்பு என்று பொருள். கடவுளுக்கு நன்றி, இவர் காண்டம் (Condom) என்று எழுதவில்லை. அவர் (ஷர்மிளா) உண்மையான டாக்டரா அல்லது வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா? எதுவாக இருந்தாலும், திராவிடம் என்பது வெட்கக்கேடான கருத்து என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.