சில நாட்களாகவே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. இதனால் நகைக்கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் சற்று அதிகமாகிறது. அதுவும் இந்த மாதம் முகூர்த்த தேதி அதிகம் இருப்பதால், கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அந்த வகையில் நேற்று சென்னையில் ஒரு கிராமிற்கு ரூ. 20 குறைந்து 4,745 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து 37,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து 4,735 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 குறைந்து 37,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் வெள்ளி கிராம் ஒன்று 63.70 ரூபாயாகவும், கிலோ ஒன்று 63,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.