சென்னை: பாஜக பந்த்-க்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு, இதுதொடர்பான விசாரணையில், கோவையின் முக்கிய 5 இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட செயல் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராகவும், தமிழகஅரசின் மெத்தனைத்தை கண்டித்தும், வரும் 30ந்தேதி கோவையில் பந்த் நடத்தப்படும் என பாஜக மாநில தலைமை அறிவித்து உள்ளது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் கடைகளையோ, நிறுவனங்களை அடைக்கக்கோரி யாராவது வற்புறுத்தினால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், பாஜகவின் பந்த் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 31ந்தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிப்பு…
கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!
கோவை கார் வெடிப்பு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும்! அமைச்சர் செந்தில் பாலாஜி