புதுடெல்லி,
இந்தியாவின் பிரதமர் பதவியை தலைவர்கள் குறித்த ஆவணங்கள், தகவல்கள், புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகம் புதுடெல்லியின் தீன் மூர்த்தி சாலையில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நமது பிரதமர்களின் சாதனைகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம், இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கலாம் எனும் நோக்கத்தில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த அருங்காட்சியகத்திற்கு கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை 1,15,161 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மேலும், சாதனை எண்ணிக்கையாக கடந்த அக்டோபர் 15-ம் தேதி ஒரே நாளில் 3,233 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.