வாரிசு நியமன விவரங்களை பதிவு செய்ய போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு உத்தரவு…

சென்னை: போக்குவரத்து பணியாளர்கள், தங்களது வாரிசு நியமன விவரத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் பணி பதிவேடு மையத்தின், முதுநிலை துணைமேலாளர் சுற்றறிக்கை வெளியிட்ட உள்ளார்.

அதில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களும், அவரவர் பணிப்பதிவேட்டில் வாரிசு நியமன (Nomination) பதிவு செய்திருத்தல் வேண்டும். அவ்வாறு இதுவரை பதிவு செய்யாதவர்கள், மருத்துவ அடையாள அட்டையில் வாரிசு நியமன பெயர்களை உரிய ஆதார, ஆவணங்களுடன் பதிவு செய்து, அதனுடைய நகல், திருமணச் சான்று, , குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் உள்பட ஆவணங்களின் நகல்களை, கோரிக்கை மனுவுடன் இணைத்து, உரிய அலுவலரிடம் ஒப்புகை பெற்று பணிமனை கிளை மேலாளர்கள் மூலமாக, துணை மேலாளர் (பணியாளர் பிரிவு) அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.