விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் எஞ்சின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

நெல்லை: நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரையோஜனிக் ராக்கெட் எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 30 வினாடிகள் இந்த சோதனை நடைபெற்றது. நெல்லை மாவட்டம் மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ உந்தும வளாகத்தில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன் யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜினின் C20 E11 MK III சோதனை இன்று மகேந்திர கிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. 30 வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.