சென்னை: 19 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது. தற்போது 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது.