BREAKING: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் – மருத்துவமனையில் அட்மிட்!

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதா அல்லது இரவே வீட்டிற்கு செல்லலாமா என்று முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.