Rishi Sunak: ஐநா பருவநிலை மாநாட்டுக்கு நோ சொன்ன பிரதமர் ரிஷி சுனக் – என்ன காரணம்?

ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பங்கேற்க மாட்டார் என, அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயதேயான ரிஷி சுனக்கை, பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ், முறைப்படி, புதிய பிரதமராக அறிவித்தார்.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி எகிப்து நாட்டில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொள்ள மாட்டார் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி பேச்சு; இருவரும் பேசியது என்ன?

பிரிட்டன் நாட்டின் அவசர கால பட்ஜெட் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளாத போதிலும், பிரிட்டன் அமைச்சர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டு புவி வெப்பமாதலை தடுப்பது குறித்து ஆலோசிக்க உள்ளன. கடந்த ஆண்டு இந்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.