ஏரி குளங்களை மீண்டும் தூர்வார வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பிரச்சார நடைப்பயணம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் ஏரிகள் மீட்சி சோழர் கால ஆட்சி என்ற முழக்கத்துடன் சோழர் கால பாசன திட்ட ஏரி குளங்களை மீண்டும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சார நடைப்பயணத்தை தொடங்கினர். சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் தெற்காசியாவை தனது கொடையின் கீழ் கொண்டு வந்து கங்கை வரை படையெடுத்து கங்கை நீரை கொண்டு வந்து சோழ கங்கம் என்ற மிகப்பெரிய ஏரியை தோற்றுவித்த ராஜேந்திர சோழன் விவசாய பாசனத்திற்கு சோழர்கள் முக்கியத்துவம் அளித்தனர். 

காவிரியில் சோழ மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை இன்றளவும் நிலைத்து நின்று தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை டெல்டா பகுதிகளாக விளங்க காரணகர்த்தாவாக உள்ளார். 

அரியலூர்  மாவட்டத்தில் கண்டிராதீர்த்தம் ஏரி, கரைவெட்டி ஏரி, சுக்கிரனேரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன பரப்பு உள்ள பெரிய ஏரிகளையும், சுத்தமல்லி நீர்த்தேக்கம், பொன்னேரி உள்ளிட்ட பல பாசன ஏரிகள் மூலம்  பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

நாளடைவில் ஏரிகள் ஆக்கிரமிப்பாலும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தினாலும் விவசாய பகுதி குறைந்து போனது. எனவே இதனை மீட்டெடுத்து சோழர்கால ஏரிகள் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கீழப்பழூரில் பிரச்சார நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.