கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை பெண்.
5,372 வாக்குகள் பெற்று அபார வெற்றி.
கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் பதவிக்கான மறு தேர்தலில் இலங்கை தமிழ்ப்பெண் வெற்றி பெற்றுள்ளார்.
Scarborough Northன் TDSB Trustee (அறங்காவலர்) பதவிக்கான மறுதேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் கல்வி சபை அறங்காவலர் பதவிக்காக இலங்கை தமிழ்ப்பெண்ணான யாழினி ராஜகுலசிங்கம் போட்டியிட்டார்.
இவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் Gary Anandasangareeம் பிரச்சாரம் செய்து அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த தேர்தலில் மொத்தம் 11,478 வாக்குகள் எண்ணப்பட்டன.
@YaliniR_Ward21/twitter/@gary_srp/twitter
இதில் 5,372 வாக்குகள் (46.8 சதவீதம்) பெற்று யாழினி ராஜகுலசிங்கம் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தை Sonny Yeungம் (2586 வாக்குகள்), பிடித்துள்ள நிலையில் மூன்றாம் இடத்தை Grant Xiong (1547 வாக்குகள்) பிடித்துள்ளார்.
ஏற்கனவே யாழினி ராஜகுலசிங்கம் இந்த பதவியில் இருந்த நிலையில் இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றுள்ளார்.