தாய்லாந்தில், சேற்றில் சிக்கிய குட்டி யானை ஒன்று, வெளியேற உதவிய பெண்ணுக்கு தும்பிக்கையை உயர்த்தி நன்றி தெரிவித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கரும்பு தோட்டத்தில் இருந்து சாலையில் ஏற முயன்ற குட்டி யானை சேற்றில் சிக்கிக் கொண்ட நிலையில், அவ்வழியாக சென்ற பெண் அதன் கால்களை பிடித்து இழுத்து மேலே வர உதவியுள்ளார்.
ஒரு வழியாக மேலே வந்த குட்டி யானை, அந்த பெண்ணுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தும்பிக்கையை உயர்த்தி காட்டியது.