தென் கொரியாவில் நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவத்திற்கு ரிஷி சுனக் இரங்கல்
எங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த தென் கொரியர்களுடனும் உள்ளன – ரிஷி சுனக்
தென் கொரியாவில் ஹாலோவீன் துயர சம்பவம் குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சியோல் நகரில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக தலைவர்கள் பலரும் இந்த துயர சம்பவத்திற்கு வருத்தமும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
‘இன்றிரவு சியோலில் இருந்து பயங்கரமான செய்தி.
இந்த மிகவும் துன்பகரமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த தென் கொரியர்களுடனும் உள்ளன’ என கூறியுள்ளார்.
Horrific news from Seoul tonight.
All our thoughts are with those currently responding and all South Koreans at this very distressing time.
— Rishi Sunak (@RishiSunak) October 29, 2022
PA Wire
ஹாலோவீன் துயர சம்பவத்தில் இதுவரை 151 பேர் பலியாகியுள்ளதாகவும், 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.