உலகளவில் தமிழ் திரைப்படங்களுக்கு இப்போது பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. வசூலிலும் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து சாதனை செய்து வருவது,தமிழ் சினிமா துறைக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கே பெருமிதமாக இருக்கிறது. அந்த வகையில் அண்மையில் வெளியான விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் உலகளவில் வரலாறு காணாத வசூல் சாதனைகளை படைத்தன. விக்ரம் 400 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, கமலின் மாபெரும் கமர்ஷியல் ஹிட்படமாக மாறியது. அதேபோல் பொன்னியின் செல்வன் படமும் மாபெரும் வசூலை வாரிக்குவித்திருக்கிறது.
அண்மையில் வெளியாகி அண்டை மாநிலமான கேரளாவில் அதிக வசூலை வாரிக் குவித்த திரைப்படங்களின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை இங்கே தெரிந்து கொள்வோம்.
1. விக்ரம் – (ரூ. 40.1 கோடி)
2. பொன்னியின் செல்வன் – (ரூ. 24.15 கோடி)
3. பிகில் – (ரூ. 19.80 கோடி)
தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை படைத்த படமாக இருக்கும் விக்ரம், கேரளா பாக்ஸ் ஆஃபீஸிலும் முதல் இடத்திலேயே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு ஓடிடியிலும் அமோக வரவேற்பு இருந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெற்றி படமாக மாறியது. தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் அலைஅலையாக வந்தது. 3வது இடத்தில் விஜய்யின் பிகில் கேரளாவில் அதிக வசூல் செய்திருக்கிறது.