ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பசும்பொன்னில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அண்ணாமலை, “தமிழகம் நன்றாக இருக்க வேண்டும். செல்வ செழிப்பாக இருக்க வேண்டும். நம் விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும். அதை வேண்டிக்கொண்டுதான் இங்கிருந்து செல்கிறோம். நம் பிரதமரும், முத்தராமலிங்க தேவர் மீது மரியாதை வைத்துள்ளார்.
பிரதமர் மோடி அவர்களை இந்த மண்ணிற்கு எடுத்து வரும் அனைத்த காரியங்களையும் தமிழக பாஜக செய்யும் என்று உறுதிமொழியை கொடுக்கிறேன். வருகின்ற 11- ம் தேதி நம் பிரதமர் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிற திட்டம் உள்ளது.
கோவை சம்பவம் தொடர்பாக கொடுத்த அறிக்கை காவல்துறை கொடுத்தத அல்ல. டிஜிபி கொடுத்த செய்திக் குறிப்பு. காவல்துறை நண்பர்கள் மிக கடுமையாக உழைக்க கூடியவர்கள். சில அதிகாரிகள் மேலே அமர்ந்து கொண்டு தவறான முடிவுகளை எடுத்துக்கொண்டு, அதை பாஜக கட்சி கேள்வி எழுப்பும்போது காவல்துறையே ஒரு அறிக்கை கொடுத்ததுபோல பசாப் காட்டுகின்றனர். இன்னும் இரண்டு மணி நேரத்தில் அந்த அறிக்கைக்கு வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி பதிலளிக்கப்படும்.
தீவிரவாத சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாமல் இருக்க சமரசமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை கார்வெடிப்பு சம்பவத்திற்கு முன்பே ஜமேஷா முபின் குறித்து மத்திய உளவுத்துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறை. செம்டம்பர் மாதல் முடியும் வரை நகரத்திற்கான உளவுத்துறை அதிகாரி பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது” என தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM