தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக போற்றி செயல்பட்டு வந்தவர் முத்துராமலிங்கத் தேவர். இவர் இந்திய விடுதலைக்காக போராடியவர். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கரங்களை வலுப்படுத்தியவர். இவரது பிறந்த நாள் விழா தமிழகத்தில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இங்கு ஆண்டுதோறும் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழா களைகட்டும். அந்த வகையில் இன்று (அக்டோபர் 30) தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விடுதலை போராட்ட வீரரான முத்துராமலிங்க தேவருக்கு தென் மாவட்ட மக்கள் மனங்களில் முக்கிய இடமுண்டு. அதுமட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் முக்கியமான தலைவராக விளங்குகிறார்.
எனவே ஆண்டுதோறும் தேவர் நினைவிடத்திற்கு வந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தவறாமல் அஞ்சலி செலுத்தி விடுவர். அதன்படி, ஆளுங்கட்சியான
, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் பசும்பொன் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதையொட்டி 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் வருவதாக இருந்தது. ஆனால் நீண்ட தூர பயணங்களை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதால் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
அதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் தங்கக் கவசத்தை பெற்று வந்து, தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது. இம்முறை எடப்பாடி பழனிசாமி,
ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி பூசல் காரணமாக விஷயம் நீதிமன்றம் வரை சென்றது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, ராமநாதபுரம் டி.ஆர்.ஓவிடம் தேவரின் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் கவசத்தை அளித்தார். இதனால் குழப்பமின்றி பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வரவில்லை என்று தெரிவித்துவிட்டார். அதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். திமுக சார்பில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி உள்ளிட்டோர் இன்று பசும்பொன்னில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கள்ளக்குறிச்சியில் திருமண விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஓ.பன்னீர்செல்வம்,
, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தவுள்ளனர்.