பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் மற்றும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 60 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் கேமரைன்ஸ்சுர் மாகாணத்தில் நேற்று அதிகாலை ‘நல்கே’ புயல் கரையைக் கடந்தது. கடந்த நான்கு நாட்களாக பெய்யும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒடின் சின்சுவாட் நகரின் அருகேயுள்ள குசியாங் என்ற பழங்குடியினர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதைந்தன. அந்த வீடுகளில் வசித்த 60 பேரை தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement