நமக்கு ஏது வீக் எண்ட்? இழந்த செல்வாக்கை மீட்பது தான் ஒரே குறிக்கோள். இதற்காக 3,500 கிலோமீட்டர் நடைபயணத்தை முடிக்காமல் விட மாட்டேன். அதற்காக மெதுவாக நடந்தே செல்வேன் என்று நினைத்து விடாதீர்கள். ஓடுவேன். ஆடுவேன். பேசுவேன். கலந்துரையாடுவேன். குறைகளை கேட்டறிவேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கூலித் தொழிலாளர்கள் முதல் முதலாளிகள் வரை பலதரப்பட்ட மக்களை சந்திப்பேன் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார். வேறு யாருமல்ல ராகுல் காந்தி தான். 52 வயதிலும் சீறிப் பாய்ந்து இந்திய ஒற்றுமை பயணத்தை குதூகலமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இவரது பயணம் தமிழகத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா வழியாக தெலங்கானா மாநிலத்தை அடைந்துள்ளது. இம்மாநிலத்தில் 5வது நாளாக நடைபயணத்தை தொடர்ந்து வருகிறார். ராகுல் காந்தியுடன் மாநில
காங்கிரஸ்
கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி, முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கைகோர்த்து நடந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி ராகுலின் பாதுகாவலர்கள், மாநில போலீசார் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்நிலையில் இன்று (அக்டோபர் 30) காலை சிறுவர்கள், கட்சியினருடன் நடந்து செல்கையில், திடீரென வேகத்தை கூட்டி ஓட ஆரம்பித்துவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராமல் கட்சியினரும், பாதுகாவலரும், மாநிலப் போலீசாரும் அவசர அவசரமாக ஓடியதை பார்க்க முடிந்தது.
ராகுல் காந்தியின் இத்தகைய பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த போதிலும், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள உத்வேகத்தை, உற்சாகத்தை மறுப்பதற்கில்லை.
இதற்கிடையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் புறப்பட்டு வந்து, ராகுலின் ஓட்டத்தை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.