வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதாலும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்இலங்கை கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தஞ்சை, திருவாரூர், நாகை. மயிலாடுதுறை, புதுக்கோட்டை. சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்ளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று செனனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல் (தர்மரி) 5, திருகழுக்குன்றம் (செங்கல்பட்டு), காரைக்கால், செய்யூர் (செங்கல்பட்டு, முகையூர் (விழுப்புரம்) தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் மீனவர்களுக்கு குறிப்பிடும்படியான எச்சரிக்கை எதுவுமில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.