பிரேசிலியா :பிரேசில் அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் புதிய திருப்பமாக, முந்தைய அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டாசில்வா, 77, வெற்றி பெற்றுள்ளார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அதிபர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
இதில், தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனாரோவை எதிர்த்து, முன்னாள் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டாசில்வா போட்டியிட்டார். கடும் போட்டி நிலவி வந்த நிலையில், லுாலா, 50.9 சதவீத ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். அதிபர் ஜெயிர் போல்சனாரோவுக்கு, 49.1 சதவீத ஓட்டுகள் கிடைத்ததாக, அந்த நாட்டில் தேர்தலுக்கான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதன் வாயிலாக, 2003 முதல் 2010 வரை இரண்டு முறை அதிபராக இருந்த லுாலா மீண்டும் அதிபராகிறார். வரும் ஜன., 1ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.
ஆனால் இந்தத் தேர்தல் முடிவுகளை போல்சனாரோ ஏற்கவில்லை என்றும், இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர உள்ளதாகவும், அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லுாலாவுக்கு, நம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement