சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாக்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் கனமழை என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.